யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கே கொண்டு வந்து பொருள்கள் வழங்கும் வணிக நிலையங்களின் விவரம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீதிகளுக்கு வருவதைத் தடுப்பதற்கு இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழக நிர்வாகத்தினரின் தொடர்ச்சியான முயற்சியால் மாவட்ட மக்களின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை வர்த்தக நிலையங்களுக்கு ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

முடிந்தளவுக்கு தங்களது வீடுகளில் இருந்தவாறே தொலைபேசி அழைப்புக்களூடாக பொருள்களை கொள்வனவு செய்து நம் சமூகத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுதவுமாறு பொதுமக்களாகிய தங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று மாவட்டச் செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ஆகியோர் கேட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor