வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியவர்கள் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்திற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்றுவரை கடமைகளைப் பொறுப்பேற்கவிடாது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், உடனடியாக தம்மை பணிக்கு அமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor