புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்!

புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்துபிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது குறித்த மாயனத்தைச் சூழவுள்ள மக்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரு தரப்பினரிடமும் பொலிஸார் பேச்சுக்களை நடத்திய போதிலும் இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் இரு தரப்பினைச் சேர்ந்த நால்வரை மல்லாகம் நீதவானிடம் பொலிஸார் அழைத்துச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைசெய்த நீதவான் சடலத்தை எரிக்கவிடாது எதிர்ப்புத் தெரிவித்த தரப்பினரைச் சேர்ந்த நால்வரையும் கைதுசெய்ய உத்தரவிட்டார். அத்துடன் சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

இதனையடுத்து மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தை தகனம் செய்ய வந்திருந்தவர்கள் நான்கரை மணித்தியாலங்களாகக் காத்திருந்த நிலையில், நீதிமன்றக் கட்டளையை அடுத்து வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலத்தை தகனம் செய்தனர்.

Recommended For You

About the Author: Editor