நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!!

நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத 300க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த அரசின் ஆட்சியின் போது வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தமக்கு நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரி இந்தப் போராட்டத்தை தொண்டர் ஆசிரியர்கள் முன்னெடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor