தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருந்த கொள்ளையர் இருவர் கைது!!!

தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அந்த வீடு இன்று நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் மறைத்துவைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. அதனால் அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்று பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor