வடமாகாணத்திற்கு வருமாறு ரஜனிகாந்தை நேரில் சென்று அழைத்த விக்னேஸ்வரன்!!!

பிரபல திரைப்பட நடிகா் சுப்பா் ஸ்ராா் ரஜனி காந்தை தமிழகத்தில் சிநேகபூா்வமாக சந்தித்த முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.

நிகழ்வு ஒன்றுக்காக தமிழகத்திற்கு சென்றுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகா் ரஜனிகாந்தை சென்னையில் சந்தித்து பேசியிருந்தாா். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனா்.

இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார் என்றும், வடமாகாணத்திற்கு வருமாறு சீ.வி.விக்னேஸ்வரன் இதன்போது ரஜனிகாந்திற்கு அழைப்பு விடுத்தாா்.

Recommended For You

About the Author: Editor