யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா? எாிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள்!!

யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது.

எனினும் அரசாங்கம் எாிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor