கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறைக்கிடையிலான இரு ரயில் சேவைகள் நிறுத்தம்

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்­களின் சேவை­களை, இன்று முதல் நிறுத்­து­வ­தற்கு ரயில்வேத் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

இதன்­படி 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், இன்று செவ்­வாய்க்­கி­ழமை முதல் இயங்­க­மாட்­டாது.

பய­ணி­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி கார­ண­மா­கவே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ரயில்வேத் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

இதற்கு பதி­லாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை – தலை­மன்னார் இடையே இயக்­கப்­படும்.

நாளை முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்­களும் கோட்டை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து இரவு 7.15 மணிக்கு புறப்­பட்டு அதி­காலை 3.25 மணிக்கு தலை­மன்­னாரைச் சென்­ற­டையும்.

இந்த ரயில் தனது பய­ணத்தை மீண்டும் தலை­மன்­னாரிலிருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்­பித்து, காலை 4.40 மணிக்கு கொழும்பு, கோட்­டையை வந்­த­டையும் என்றும் ரயில்வேத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor