தொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

ஆபிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலர் premium callback scam என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இலங்கையில் தொலைபேசிகளை பயன்படுத்துவோரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் தவறிய அழைப்பை (Missed calls) விடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

10235,646,2532 ,10212,621-001782 இவ்வாறான இலக்கங்களுக்கு பதிலளிக்கும் பொழுது இவர்களது தொலைபேசி கணக்கிற்குள் பெருந்தொகை பணம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்பவர்களிடம் இருந்து மோசடி செய்யப்படுகின்றது.

இவ்வாறான தவறிய அழைப்பிற்கு பதிலளித்த இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்துயோர் இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் சபையிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் 10235,646,2532 ,10212,621-001782 என்ற இலக்கங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor