இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள கமால்குணரட்ண இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு யார் காரணம் என்பதை கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பௌத்த நாடு, மக்களிற்கு தமதுசொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது,அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுபடையினரின்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor