இன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி!

சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இன்று (13) அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியை சுற்றுச்சூழல் விரும்பி என அறிமுகப்படுத்த உள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அறிமுக விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த முச்சக்கர வண்டிக்கு சூரிய சக்தியால் இயங்கும் மின்கலம் பெருத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor