வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு! – இரா.சம்பந்தன்

வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தடவைகள் அரசாங்கத்தை நினைவுபடுத்தியதாகவும், வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்துக்குள்ள ஆர்வம் வடக்கு மாகாண விடயத்தில் காணப்படாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த ஆளுநர் நியமனத்தின் காரணமாக வருட இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றங்கள், மாகாணத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்பன செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor