யாழில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!! இராணுவம் களத்தில்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியின் வழிகாட்டல் இந்தப் பணி இடம்பெறுவதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் இன்று ஆரம்பித்து வகைக்கப்பட்டது.

குருநகர் கடற்கரையை சுத்தமாக்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுத்தமாக்கும் பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்டச் செயலர், “இவ்வாறு சுத்தம் செய்யும் இடங்களில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மக்கள் குப்பைகளை கடற்கரையோரங்களில் கொட்டாது அதனை உரிய முறையில் அகற்ற முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor