ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் கோட்டா!!

இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

அத்தோடு ஜனாதிபதி செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் புதிய பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவர் என கருதப்படும் இறுதிக் கட்ட யுத்ததின்போது முக்கிய பங்கு வகித்த ஒருவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குவின் பணிப்பாளராக ஓசத செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் நேற்று காலை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor