சந்­தி­ரிகா யாழிற்கு விஜயம்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டாரநாயக்க குமா­ர­துங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­துக்கு நீண்ட நாட்­களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும் அவர், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் மக்கள் சந்­திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

பின்னர் தெல்­லிப்­பழை, சங்­கானை போன்ற இடங்­க­ளுக்கும் செல்­ல­வுள்­ள­துடன் அப்­ப­குதி மக்­க­ளு­டனும் சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் மக்கள் சந்­திப்­புகளை மேற்கொண்டதன் பின்னர் அவர், கிளி­நொச்­சிக்கு செல்லவுள்ளார்.

அங்கு பளை இரா­ஜேஸ்­வரி மண்­ட­பத்தில் நடை­பெறும் மக்கள் சந்திப்பிலும் கிளி­நொச்சி பல­நோக்கு கூட்­டு­றவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor