யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து முதலாவது விமான சேவை இன்று பதிவாகியுள்ளது!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை FitsAir இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது.

இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம். இதில் இந்த விமான சேவை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.

இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது.

மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் சென்றடையும்.

இதேவேளை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் Alliance Air விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

இந்த விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.
அதன்பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor