வடமாகாண சபையில் அஞ்சலி

காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார்.

அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக கறுப்புக்கொடியும் கட்டப்பட்டது.

அவருக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பகமாகியது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களில் சபை அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor