Ad Widget

வைத்திய அதிகாரிகள் சங்கப் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

நாடு தழுவிய ரீதியில் வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிபந்தனைகளின் கீழ் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த போராட்டத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்கின்றமைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் வழங்கியதாகவும் நலீன் ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

Related Posts