வீதியோர மது விருந்து; மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம்

பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களது மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

moto-bike-police

அரியாலைப் பகுதியில் நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்த வேளை குறித்த பகுதிக்கு பொலிஸார் பிரசன்னமாகியதால் குடித்த போத்தல்களையும் மோட்டார் சைக்கிள்களையும் விட்டு ஓட்டமெடுத்தனர்.

இதனால் அவர்களுடைய 6மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தனர். தற்போது பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் வைக்கப்பட்டுள்ளதுடன் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.