வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

வடமராட்சி தம்பசிவம் சந்தியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் சீதாதேவி (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி பெண், அவரது வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் எரிந்த நிலையில் நடுவீதியில் கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் அம்புலன்ஸ் மூலம் குறித்த பெண்ணை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள்.