`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்’ தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் டீசர் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

அனிருத் இசையில் “சர்வைவா” மற்றும் “தலை விடுதலை” பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், `விவேகம்’ மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அஜித் – காஜல் அகர்வாலுக்கு இடையேயான காதல் பாடலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். முதல்முறையாக அனிருத், சிவாவுடன் கபிலன் இணைந்திருக்கிறார். அஜித்துக்காக கபிலன் எழுதியுள்ள முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. “காதலாட” என்ற வார்த்தையுடன் தொடங்கும் இந்த பாடல் ஒரு மெல்லிசை பாடலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பிரதீப் குமார் – சாஷா திரிபாதி இணைந்து பாடி இருக்கின்றனர்.

காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor