விருந்தினர் விடுதியை பார்வையிட்ட மேர்வின் சில்வா

மகிந்த சிந்தனையின் வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுசன சேவைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தினர் விடுதிக்கான கட்ட அமைப்புக்கள் எதிர்வரும் தை மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

mervin-jaffna

இதற்காக 9.2 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மத்திய போக்குவரத்து நிலையத்தில் வேலணை,ஊர்காவற்துறை,நயினாதீவு போன்ற பகுதிகளில் செல்லும் பிரதான வீதியின் 09 கிலோ மீற்றர் தூரத்தில் மண்கும்பான் பகுதியில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றன.

முப்பது வருட கால யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் சமாதான காலப்பகுதியில் உல்லாசப் பயணிகளின் விஜயம் அண்மைக் காலமாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

தொடர்பாடல் மற்றும் பொதுசன சேவைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிடும் நோக்குடன் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

பின்னர் யாழ். வேலணை மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற விருந்தினர் விடுதிக்கான கட்ட அமைப்பு வேலைத்திட்டங்களை பார்வையிடும் நோக்குடன் அந்தப் பகுதிக்கு அமைச்சர் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.