விபத்து: சிறுவர்கள் காயம்

யாழ். சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (18) முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரைச் சேர்ந்த தேவதாஸ் ஜெய்ஸன் (வயது 03), தேவதாஸ் கஜானி (வயது 04) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளதுடன் மன்னாரிலிருந்து சாவகச்சேரிப் பகுதியிலுள்ள உறவினர்கள் வீட்டிற்கு தனது பெற்றோருடன் குறித்த சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து திரும்பிச் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் பிரயாணித்த சிறுவர்களது பெற்றோருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லலயெனவும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.