விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

accidentசாவகச்சேரிப் பகுதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த மரியநாயகம் செல்வமணி (வயது 67), மரியநாயகம் மரியதாஸ் (வயது 47) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை (28) பொலிஸார் கூறினர்.

Recommended For You

About the Author: Editor