விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

கைதடி சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் இன்று (04) மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடி கிழக்கை சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்ற இளைஞன் உயிரிழந்ததுடன், நாவற்குழியை சேர்ந்த யோகராசா பிரசாத் (வயது 21) என்பவர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.