வித்யூத் ஜம்வாலுடன் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ருதிஹாசன்!

கமாண்டோ ஹீரோ வித்யூத் ஜம்வால், அஞ்சான் பட புரொமோஷன் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றவர், அங்கேயே சில நாட்கள் தங்கி தன் நண்பர்களுடன் கும்மாளமிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர், தன் அடுத்தபடமான ”யாரா” படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.

shuruthy-vithu

திக்மான்சூ துலியா இயக்கும் யாரா படத்தில், இர்பான் கான், ஸ்ருதிஹாசன், வித்யூத், அமித் சாத் ஆகியோருடன் இயக்குநர் திக்மான்சூவும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் முசிறியில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் வித்யூத் உள்ளிட்ட படக்குழுவினர்.

வித்யூத் இந்தப்படத்திற்கு அவரே ஸ்டண்ட் அமைப்பதால் தனது குழுவினரோடு முறையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் ஸ்ருதிஹாசன் மற்றும் அமித் சாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

தான் எடுக்கும் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்கும் அனைவருக்கும் முறையான பயிற்சி அளித்து ஒவ்வொரு காட்சிகளையும் படமாக்கி வருகிறார் இயக்குநர் திக்மான்சூ.

Recommended For You

About the Author: Editor