விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

க.பொ.த. உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பாடத்துறைக்காக உயிர்முறைமைகளுக்கான தொழினுட்பம் மற்றும் தொழினுட்ப விஞ்ஞானம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பொருத்தமான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

18 வயதிற்கு குறையாத 35 வயதிற்கு மேற்படாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

உயிர்முறைமைகள் தொழினுட்பத்திற்காக விண்ணப்பிப்போர் விவசாய விஞ்ஞானப் பட்டமொன்றையும் தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானத்திற்கு விண்ணப்பிப்போர் பௌதிகவியல் பாடத்தைப் பிரதான பாடமாக எடுத்திருக்கவும் வேண்டும்.

விண்ணப்பமுடிவுத்திகதி 15.09.2014. விண்ணப்பப் படிவத்தையும் ஏனைய விபரங்களையும் இன்று 15.08.2014 வெளியாகியுள்ள அரச வர்த்மானியில் பார்வையிடலாம்.

Recommended For You

About the Author: Editor