விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆடைத் தொகுதியில் பிரபாகரனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த துணி வகைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

Recommended For You

About the Author: Editor