விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்க தயாராகும் அரசியல்வாதி!

விஜய்-அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கென ஒரு பாணியில் ஹீரோ இமேஜை உருவாக்கிக்கொண்டனர்.

ajith-vijay

இதற்கிடையில், ரஜினி-கமலை மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சிகள் நடந்தது போல், விஜய்-அஜீத்தை இணைக்கவும் முயற்சிகள் நடந்தன.

மங்காத்தா டைரக்டர் வெங்கட்பிரபுகூட, தன்னிடம் கதை இருப்பதாகவும், அஜீத்-விஜய்யை இணைத்து கண்டிப்பாக படமெடுப்பேன் என்றும் கூறினார். ஆனால், அது கைகூடவில்லை. அதன்பிறகு மேலும் சில இயக்குனர்கள் கதைகளுடன் அவர்களை தொடர்பு கொண்டபோதும் அவர்கள் அதற்கு உடன்படவில்லை.

இந்த நிலையில், ஜெயம் ரவி நடித்த அமீரின் ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்தவர் ஜெ.அன்பழகன். திமுகவைச் சேர்ந்தவரான இவரிடம், பேஸ்புக்கில் சிலர் விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுப்பீர்களா? என்று கேட்டதற்கு, அவர்களை இணைத்து படமெடுக்க நான் தயாராக இருக்கிறேன். இதுசம்பந்தமாக அவர்களிடம் பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.

அவரது இந்த பதில் விஜய் -அஜீத் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts