விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை!- பிரபுதேவா

தன் நடனத்தின் மூலம் இந்திய மக்களையே ஆட்டம் போட வைத்தவர் பிரபுதேவா.

vijay-pirabu-deva

இவர் நடன இயக்குனராக வாழ்க்கையை ஆரம்பித்து, பின் நடிகராகவும் வெற்றி பெற்று தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதுவரை தமிழில் போக்கிரி, வில்லு, வெடி மற்றும் ஹிந்தியில் வாண்டட், ரவுடி ரத்தூர் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் இவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேட்டுள்ளனர்.அதற்கு ‘தமிழ் சினிமாவில் எனக்கு விஜய்யை தான் மிகவும் பிடிக்கும், அவர் நடனத்தை அடித்துக்கொள்ள யாருமே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.