விஜய்யின் 60-வது பட தலைப்பு ‛தளபதி’

பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 60-வது படத்திற்கு எங்க வீட்டுப்பிள்ளை என்று எம்ஜிஆர் படதலைப்பை தான் வைத்திருந்தனர்.

vijay-60-7

அந்த தலைப்பு விஜய்க்கும் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடும்போது எங்க வீட்டுப்பிள்ளை என்பதை வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள்ளாக படக்குழுவினர் மூலமாக அந்த தலைப்பு வெளியில் கசிந்ததை அடுத்து எம்ஜிஆர் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த தலைப்பை மாற்ற முடிவு செய்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாகவே நம்ம வீட்டுப்பிள்ளை, உங்க வீட்டுப்பிள்ளை என்று இணையதளங்களில் சில டைட்டில்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதுகுறித்து அப்படக்குழுவை விசாரித்தபோது, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் தலைப்பை வைக்கலாம் என்று விஜய்யே டைரக்டர் பரதனுக்கு யோசனை தெரிவித்துள்ளாராம்.

கதைப்படி, இந்த ‛தளபதி’ டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதையே விரைவில் அறிவிப்பார்கள் என்று அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆக, இளையதளபதி விஜய் விரைவில் தளபதி ஆகிறார்.

Recommended For You

About the Author: Editor