விக்னேஸ்வரனை கொலை செய்யும் சதி முயற்சி பாரதூரமானது- மாவை

தம்மை கொலை செய்வதற்கு சதி செய்யப்படுவதாக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறையிட்டு அது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தாம் சம்பந்தனுக்கு எடுத்துரைத்துள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.நகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் எழுத்து மூலம் தனது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கவும் அந்த பழியை தமிழீழ விடுதலை புலிகள் மீது சுமத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.