வாழைக்குலை திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம், நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதிகளிலுள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலை திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி அநுர பாலித திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் மட்டும் 4 வாழைத்தோட்ட உரிமையாளர்கள் வாழைக்குலைகள் திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இரவு வேளைகளில் வாகனங்களில் வருபவர்கள் தோட்டங்களிற்குள் புகுந்து பெரிய அளவிலுள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்வதாகவும், குறிப்பாக மழை பெய்யும் தருணங்களிலே இவ்வாறான வாழைக்குலைகள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

மழை காலத்தில் வாழைப்பழத்துக்கான விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த திருட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய திருடர்களை பிடிப்பதற்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.