வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு

வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலர் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் பெயர் பட்டியலில் இருந்தால், அவர்கள் தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், பட்டியலில் அவர்களின் பெயர் இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்திலோ அல்லது அந்தந்த கிராம சேவகர்கள் மூலமோ சரிபார்க்கலாம்.

அவர்களின் பெயர்கள் இருந்தால், அவர்கள் எந்தவொரு சரியான அடையாள அட்டையையும் வாக்குச் சாவடிகளில் சமர்ப்பிக்கலாம். அனைத்து வாக்காளர்களும் இன்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார்.

நேற்று மாலை நிலவரப்படி, பல வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லை என்ற செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வாக்களிக்க முடியுமா என்ற நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுத்தன.

இந்த வார இறுதியில் சுமார் 450,000 வாக்குச் சீட்டுகள் தபால் நிலையங்களில் கிடப்பதாகக் கூறப்பட்டது, தங்கள் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள தத்தம் பகுதி தபால் நிலையங்களுக்குச் செல்லுமாறு வாக்காளர்களை தபால் திணைக்களம் வலியுறுத்தியது.

இதேவேளை மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவடையும் வரை சேகரிக்கப்படாத வாக்கெடுப்பு அட்டைகள் தபால் நிலையங்களில் கிடைக்கும் என்றும் தபால் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor