வல்வெட்டித்துறையில் 16 பேருக்கு கொரோனா!

வல்வெட்டித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்மை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor