வலி. வடக்கில் தேசிய மர நடுகைத் திட்டம்

தேசத்திற்கு மகுடம் செயல் திட்டத்தின் கீழ் தேசிய மர நடுகைத் திட்டம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாகவுள்ள கீரிமலை தட்சன்காடு என்னும் இடத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.

tree3

வுலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ் ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், திட்டப்பணிப்பாளர் திருமதி கே.மோகனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவி திட்டப் பணிப்பாளர்கள் தெல்லிப்பளை பிரதேச அலுவலாகள் கிராம அலுவலர்கள் சமுர்த்தி அலுவலர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.