வலிமேற்கில் பார்த்தீனியம் ஒழிப்பு

வடக்குமாகாண விவசாய அமைச்சு டிசம்பர் மாதத்தை பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பார்த்தீனியம் ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

3

இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2013) வட்டுக்கோட்டையில் வலிமேற்கு பிரதேசசபை பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபட்டது.

வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், செயலாளர் திருமதி சாரதா உருத்திரசாம்பவன் ஆகியோர் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் பார்த்தீனியம் ஒழிப்பு சிரமதான நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்