வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே எனது ஊதியம்: சித்தார்த்தன்

siththarthan_bbcவடமாகாண சபை உறுப்பினராக இருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஊதியப் பணத்தினை வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் கன்னியமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போது, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஊதியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.