வறட்சியால் அரிசிக்கு பற்றாக்குறை

நாட்டில் நிலவும் வறட்சியால் போதிய நெல் அறுடை இல்லாமையால் சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் நாளை நிதி அமைச்சுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, வரிச் சலுகை மூலம் அரிசியை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.