வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.குருநகர் யாகப்பர் ஆலயத் தேர்த்திருவிழா

gurunagar_james_church_01புனித வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.குருநகர் யாகப்பர் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

யாழ்.நகரப்பகுதியில் அதிக கத்தோலிக்க மக்களைக் கொண்ட குருநகர் யாகப்பர் ஆலயம், கடந்த 1993 ஆம் ஆண்டு விமானத் தாக்குதலில் சேதமடைந்ததுடன் 6 பேர் வரை உயிரை இழந்தனர்.

இலங்கை விமானப் படையின் தாக்குதலால் சேதமைடைந்திருந்திருந்த இந்த ஆலயம் குருநகர் மக்களின் கடும் உழைப்பினால் மீண்டும் புதிதாக புத்தாக்கம் எடுத்தது.

புலத்தில் வாழும் குருநகர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் இவ்வாலையம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.

புலம் பெயந்த நாடுகளில் இருந்து தாயகத்திற்கு திரும்பிய குருநகர் மக்கள் இந்த ஆலயத் தேர்ததிருவிழாவுக்காக ஒன்று கூடினர்.

Recommended For You

About the Author: Editor