வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை சமன் பந்துலசேன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி நியமித்துள்ளமைக்கு, தமிழ் அரசியல் தரப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor