வடிவேலுவை தனியா காமெடி பண்ணச்சொல்லுங்க பார்க்கலாம்: சீறும் சிங்கமுத்து

ஒரு காலத்தில் வடிவேலுவின் நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தவர் சிங்கமுத்து. சிங்கமுத்து எனக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்துவிட்டார் என்று வடிவேலு குற்றம் சாட்டினார். வடிவேலு தி.மு.க பக்கம் போக சிங்கமுத்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆனார். இருவரும் பிரிந்து விட்டனர்.

-singamuthu-300

இந்த நிலையில் சிங்கமுத்து, வடிவேலு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: பங்காளிக்கு (வடிவேலு) கையில படமே இல்லை. நான் நடிச்ச 11 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 25 படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்பவும் நான் பிசியான காமெடி நடிகன் தான்.

வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க. அவர் ஒண்ணும் தனியா சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம். கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம்.

அது ஹிட்டாச்சு. இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும், என்கிறார் சிங்கமுத்து.