வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

pro-col

கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100 பேர் அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உருவப்பொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததோடு நெற்றியில் கறுப்பு பட்டிகளை கட்டியபடி தங்களது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தினர்.

தேசத்துரோகி வடமாகாண முதலமைச்சரைக் கைது செய்க, தெற்கில் ஒரு சட்டம், வடக்கிற்கு இன்னுமொரு சட்டமா?, ஈழ தேசத்திற்கு இடமில்லை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor