Ad Widget

வடமாகாண பிரதம செயலார் நன்றி கடன்மிக்கவர்: சுரேஸ் எம்.பி

suresh-peramachchantheranவடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் மற்றும் முடிவுகளை வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் நடைமுறைப்படுத்தில்லையென குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர் நன்றி கடன்மிக்கவர் என்றார் .

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘வடமாகாணத்தின் கடந்த 3 வருடகால செலவீனம் பற்றிய அறிக்கையினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம செயலாளரிடம் கோரியிருந்தார் எனினும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் அது தொடர்பாக பிரதம செயலாளரினால் மேற்கொள்ளப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

வடமாகாண சபை கூடிய பின்னர் ஒரு துணை நிலை வரவு – செலவுத்திட்ட அறிக்கையினை பிரதம செயலாளர் சபையில் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதனால் வடமாகாண சபையின் வரவு – செலவுத்திட்டத்தினை சரியான முறையில் செயற்படுத்துவது கடினமாக இருக்கும்.

மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது வடமாகாணச் செயலாளர் மற்றும் நிதித்துறைக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் ஆகியோர் பங்குபற்றியிருக்க வேண்டும். இருந்தும் இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த போதும், முதல் நாள் அமர்வில் மட்டும் கலந்துகொண்டு மற்றய 2 நாட்கள் அமர்விலும் கலந்துகொள்ளவில்லை என்றார்.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மீண்டும் தமது சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பிய மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளைப் புறந்தள்ளிவிட்டு, நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மன்னார் முஸ்லீம் மக்களுக்கு 700 தொடக்கம் 800 மில்லியன் ரூபா நிதியினை கடந்த 2013 ஆம் வருடம் செலவு செய்துள்ளார் என அறிகின்றோம். இது தன்னை பிரதம செயலாளர் பதவிக்கு கொண்டு வந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக செய்துள்ளார் என்றே நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

அத்துடன் பிரதம செயலாளர் வடமாகாண முதலமைச்சர் அறியா வண்ணம் பிறமாகாணங்களுக்குச் செல்ல முடியாது. இருந்தும் முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் அவர் பலமுறை கொழும்பிற்குச் சென்று வந்துள்ளார்.

பிரதம செயலாளர் உட்பட அதிகாரிகள் எந்தவொரு அதிகாரியும் பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதாக இருந்தால் அவர்களுக்கு பொறுப்பான அமைச்சரது அனுமதி பெற்றே நடத்தவேண்டும். ஆனால் வடமாகாணச் செயலாளர்கள் தன் இஸ்டத்திற்கு கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை நடத்தினார்.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் இந்தப் பிரதம செயலாளர் தொடர்ந்து பதிவியிலிருப்பார் ஆனால் வடமாகாண நிர்வாகம் பாரிய நிர்வாகச் சீரழிவினை நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாதாகிடும். இதனால் அவர் தானாக முன்வந்து தனது பதவியினை புதிய ஒருவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.

இது மட்டுமல்ல இன்னும் பல முறைப்பாடுகள் இந்த அம்மையார் மீது உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்பட்ட போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது கிடையாது.

அவர் ஒரு பெண்மணியென்றும் அவர் கஸ்டப்பட்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் சென்றதினையும், அவருடைய பதவியினையும் கருத்திற்கொண்டு வெளியிடவில்லை. அத்துடன், அவர் தானாக பதவி விலகி வடமாகாண நிர்வாகம் சீராக நடப்பதற்கு உதவுவார் என்று எதிர்பார்த்திருந்த போதும் அவர் அதனை இதுவரையிலும் செய்யவில்லை.

இதனாலேயே அவர் மீதான இந்த விமர்சனங்களை வெளியிடவேண்டியதாயிற்று என்று சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

Related Posts