வடமாகாண சித்த ஆயுள்வேத வைத்திய பரம்பரைகளின் விபரம் திரட்டல்

சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார்.

நீண்ட பரம்பரையைக் கொண்ட வைத்தியர்கள், மருத்துவப் பரம்பரையின் பெயர், மருத்துவப் பரம்பரை ஆரம்பித்த காலம், இன்று வரையுள்ள வம்சாவளி ஆகிய விபரங்களை, மாகாண ஆணையாளர், சுதேச மருத்துவத் திணைக்களம் வடமாகாணம், சுகாதாரக்கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரிவித்தார்.

இந்த முழு விபரங்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.