வடமாகாண சபை முன்பாக மீன்பிடி டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடியினல் டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று கோரியே வடமாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாண சபை அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு முதல்வரிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.