வடமாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்

attack-attackசுண்டுக்குளிப் பகுதியில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொணடமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளொன்று எதிரே வந்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதில் துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்நிலையில் அவ்விடத்தினால் சென்ற அஸ்மின் குறித்த மோட்டார் சைக்கிளினை செலுத்திச் சென்ற இளைஞர்களிடம் இவ்வாறு மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் செல்வதா எனக்கேட்டுள்ளனர்.

இதனால் அந்த இளைஞர்களுக்கு ஆயுப்பிற்கும் இடையில் முரண்பாடு எழவே, அந்த இளைஞர்கள் மேலும் 2 இளைஞர்களை அழைத்து அஸ்மின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஆயுப் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts