வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிபடையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றவேளை, அங்கு சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
குறித்த சடலத்துடன் பெண்ணின் ஆடை இருப்பதனால் இது பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் கூறினர்
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.