வடக்கை அபிவிருத்தி செய்ய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

mahinda_rajapaksaவட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். 

அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின்  மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அழைப்புக்களை விடுத்தார்.