வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி: இராதாகிருஷ்ணன்

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு, தெற்கு உறவு ஒரு காலத்தில் சவால் மிக்கதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறுப்பட்ட பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இன மத மொழி பேதமின்றி பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படும்” என கூறினார்.